யார் இந்த சோழிய வெள்ளாளர் பாகம் மூன்று

தொடரின் முந்தைய பகுதிகள் –

யார் இந்த சோழிய வெள்ளாளர் – பாகம் ஒன்று

யார் இந்த சோழிய வெள்ளாளர் – பாகம் இரண்டு

வேலாளர் வேளாளர் ஆன கதை

வேலாளர் வேளாளர் ஆன கதை

யார் இந்த சோழிய வெள்ளாளர் – 

முந்தைய பாகத்தில் வேளாளர் என்ற சொற்பொருள் பார்த்தோம். எனினும் நிறைய இடங்களில் “வேல் கொண்டு வெள்ளாமை செய்த இனம்” என்ற சொற்றொடரை கேட்க நேர்ந்தது. முகநூலில் பழக்கமான நண்பர் ஒருவருடன் பேசும் போது, நாம் சோழிய வெள்ளாளர் இல்லை சோழிய வேலாளர் என்றார். இதுவரை வேளாளர் என்றே அறிந்திருந்த நான், அவரிடம் நீங்கள் தவறாக சொல்கின்றீர்கள் என நினைக்கிறேன், எனக்கு தெரிந்து அது வேளாளர் என்பதுதான் சரி என்றேன். அவர் இல்லை ஜெகதீஸ், நிறைய பேர் அப்படிதான் நினைக்கின்றார்கள். அது வேளாளர் இல்லை வேலாளர் என்றார்.

இந்தப் பிரட்சனை தீர்க்க வேண்டுமே என்று எனது அம்மாச்சியின் அக்கா சௌபாக்கியவதியம்மாளிடம் கைப்பேசியில் பேசினேன். அவர் இன்னும் கூட பூஜையறையில் திருவாசகத்தினை நிரம்ப சொல்லி பூஜை செய்பவர். நிறைய கோவில்களுக்கு சென்று வந்தவர். கடவுளின் மீதிருந்த பக்தியாலும், தன் கால் ஊனம் என்ற காரணத்தினாலும் திருமணம் செய்து கொள்ளாமல்,. தன்னை ஆன்மீக விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர். அவருக்கு மற்றவர்களைவிட நிறைய வரலாறுகள் தெரியும். வெள்ளாளர்களின் வரலாற்றினை அறிய அவருடன் பேசினேன். வீரபக்திரர் படையில் செங்குந்தர் இனத்தவர் இருந்தார்கள் என்பதில் ஆரமித்து சோழ நாடுகளில் வேல்படை இருந்தது வரை நிறைய சொன்னார்.

ஆதி தமிழன் –

உங்கள் கற்பனைக் குதிரையை காலத்தின் பின்நோக்கி தட்டிவிடுங்கள். கட்டிடங்கள் இல்லாத, வாகனங்கள் இல்லாத ஆதிகாலம். குறிஞ்சி நிலத்தில் மட்டுமே மக்கள் வாழ்ந்த காலம். எங்குநோக்கினும் பசுமை மரங்களும், வன விலங்குகளும், பெயர் தெரியாத பறவைகளும் இருக்கின்றன. மனிதன் தன் பாதுகாப்பிற்காக மரத்தின் தடியை உபயோகிக்க தொடங்குகிறான். அதன் பரிணாமத்தில் கூரான கல்லை அதன் முனையில் இணைக்கிறான். அதிதமிழனின் முதல் ஆயுதமான வேல் உருவான வரலாறு இதுதான். இன்றுவரை அதன் ஆதாரம் முருகன் வடிவில் இந்துமதத்தினால் காக்கப்பட்டு வந்திருக்கிறது. குறிஞ்சி நிலத்தலைவன் அல்லது தெய்வம் சேயோன் என்கிற முருகன் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பிராமணர்களின் திரிபு காரணமாக சக்தி கொடுத்தாக கதையிருந்தாலும் உண்மை இதுதானே.

வேல், சூலம், வில் போன்றவை வனமிருங்களை வேட்டையாட பிறந்தவை. அரம்,வாள்,கத்தி போன்றவை மனிதனுக்கு மனிதனுக்கு சண்டையிட உதவியவை. பின்நாளில் மனித சண்டைகளுக்கு நியதிகள் உண்டாக்கப்பட்டன. ஆயுத பயிற்சிகளும் ஆரம்பமாயின. வேல் கையாளுவதிற் சிறந்த வேலாளன், சூலத்தில் சிறந்த சூலன்/சூரன் – சூலத்தான், வில்லில் சிறந்த வில்லாளன் (அம்பெனும் விசியைக் கையாளத் தெரிந்த விசியன்), அரத்தில் சிறந்த அரையன், கத்தியாளுவதில் சிறந்த கத்தியன் இப்படி பிரிவுகள் உண்டாக தொடங்கின. குறிஞ்சியில் மக்கள் தொகை அதிகமாக, மக்கள் முல்லைக்கு இடம் பெயர்ந்தார்கள். முல்லையில் கால்நடைகளை வளர்க்கும் அளவிற்கு மனிதர்கள் உயர்ந்தார்கள். கால்நடைகள் செல்வங்களாக பார்க்கப்பட்டன. களவு தோன்றியது.

களவு தோன்றினால் காவலும் தோன்றுமல்லவா, காவலுக்கு தலைவன் உருவானான். மனிதர்களின் பரிணாமம் வளர்ந்து, மருத நிலத்திற்கு வந்தார்கள். மருதம் குறிஞ்சி, முல்லை போல காடுகளாக இல்லை. நீர் நிலைகள் அதிகம் உள்ள இடமாக மருதம் இருந்தது. ஆறுகளும், குளங்களும் இருந்தன. கால்நடைகளுக்கான உணவு தேவைக்காகவும், தனக்காகவும் நெல் பயிரிடுதலை ஆரமித்தான் மனிதன். குறிஞ்சி நிலத்தில் வேலாளனாக இருந்தவன், தனது ஆயுதத்தினை விவசாயம் செய்ய உபயோகிக்கிறான். வெள்ளம் என்று அழைக்கப்படும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் அறிவை பெருகிறான். வேலாளன், வேளாளன் ஆகிறான். அதாவது குறிஞ்சி நிலத்து வேலன் முல்லை நிலத்தில் வேலாளனாகி மருத நிலத்தில் வேளாளன் ஆகிறான்.

மருத நிலத்தின் மீதான பற்று இன்னும் வெள்ளாளர்களுக்கு தீர்ந்த பாடில்லை. என் அன்னையின் பெயர் மருதாம்பாள், பாட்டாவின் பெயர் மருதபிள்ளை. இப்படி மருத நிலத்தின் ஞாபகமாக காலம் காலமாக இந்த பெயர்கள் வழக்கில் உள்ளன. ஆதித் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காரணத்தோடுதான் பெயர்கள் சூட்டினார்கள். அதுவும் அழகிய தமிழில். மருத நிலத்தில் பிறந்தவன் மருதன். பெரும்பாலும் மருத நிலத்தில் வாழ்ந்த வெள்ளாளர்களுக்கு பிள்ளை குலப் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இல்லத்துப் பிள்ளைமாரில் பெரும் வீரனான மருதநாயகம் பிள்ளை கூட மருத நிலத்தவன் என்ற அடையாளத்தின் எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்.

நன்றி –

ந.கண்ணன்

சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வம் தொட்டியச்சி அம்மன் கோவில் மணவாடி

பொதுவாக பிள்ளைமார்களின் குடும்பங்களில் இருக்கும் ஒரு பண்பை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அது கன்னிதெய்வ வழிபாடு. என்னுடைய முகநூல் நண்பர் திரு. ரத்தினம் அவர்களுடன் சில நேரங்களில் கலந்துரையாடும் போது அவரும் இந்த பண்பை பரவாலாக கண்டுள்ளதாகவும், தங்கள் வீட்டில் ஒரு தெய்வத்தினை வழிபடுவதாகவும் கூறினார். என்னுடைய வீட்டில் கூட கன்னிதெய்வ வழிபாட்டினை என் அன்னை கடைபிடித்து வருகிறார். ஆனால் இந்த கன்னிதெய்வ வழிபாடு குடும்பத்தில் மறைந்த உறவுகளுக்காவே நடைபெறுகிறது. அதில் கொஞ்சம் குடும்ப பாசம் உள்ளதை மறுக்க முடியாது. பெற்றோர்களுக்கு மட்டுமே அந்தனர்களின் திதி நடக்கையில், இந்த வழிபாடு மற்ற உறவுகளுக்காக நடைபெறுகிறது.

கரூர் அருகே இருக்கும் மணவாடி என்ற கிராமத்தில் என் உறவினர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் குலதெய்வம் தொட்டியச்சியம்மன். ஏறத்தாள நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப தெய்வமாக இருக்கும் இந்த அம்மன் பிள்ளைமார் இனமே இல்லை. சகோதரன் தளத்தில் எழுதிய அந்த தெய்வத்தின் கதையை இங்கு மறுபிரசுகம் செய்கிறேன்.

தொட்டியம் நாயக்கர் பற்றியும், சோழிய வெள்ளாளர் பற்றியும் தெரிந்து கொண்டால் மட்டுமே நாட்டார் தெய்வமான தொட்டியச்சியின் கதையை அறிய முடியும். இந்த இரண்டு சமூகமும் தொட்டியச்சியின் கதையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. அதனால் இந்த சமூகங்களைப் பற்றி முதலில் சில வரிகள்,…

தொட்டியம் நாயக்கர்கள் –

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம். ஆந்திராவில் அதிகமாக வாழும் காப்பு என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த தொட்டியம் நாயக்கர்கள் இருக்கிறார்கள். காப்பு இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் தொட்டியம் நாயக்கர்கள் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “கம்பளம்” நாட்டினை வைத்து ராஜகம்பளம் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

சோழிய வெள்ளாளர் –

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம்.  தமிழகத்தின் தென்பகுதியில் அதிகமாக வாழும் இல்லத்துப் பிள்ளைமார்(ஈழவர்) என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த சோழிய வேள்ளாளர்கள் இருக்கிறார்கள். ஈழவர் இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் சோழிய வெள்ளாளர் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “சோழ” நாட்டினை வைத்து  சோழிய வெள்ளாளர் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

மணவாடி –

கரூர் மாநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் இருக்கிறது மணவாடி என்ற குக்கிராமம். எனது சிற்றன்னையை மணம்முடித்து கொடுத்த ஊர் என்பதால் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருக்கமான ஊர். பாறை பூமி என்பதால் தண்ணீருக்கு கொஞ்சம் பஞ்சம். அதனாலேயே சோளப் பயிர்கள் வயல்களிலும், கள்ளி செடிகள் மற்ற இடங்களிலும் காணப்படும். சென்ற தலைமுறை வரை அத்தனை பேரும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வந்தார்கள். நிற்காது ஓடும் எண்ணை செக்கும், நிரம்பி வழியும் பசுமையும் காணப்படும். இப்போது கரூர் நகரின் வளர்ச்சியால் பலர் டெக்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு இங்கு வயக்காடுகளின் வரப்போரங்களில் விளையும் குண்டுமணியையும், காதுகுத்தி முள்ளையும் வேறுபகுதியில் நான் கண்டதில்லை. பனை மரங்கள் அதிகம் இருந்த பகுதி இப்போது புதியதாக வந்திருக்கும் பணக்கார வெள்ளாளர்களால் பாசன வசதி செய்யப்பட்டு தென்னை தோப்பாக காட்சியளிக்கன்ற புதுமையும் காண முடிந்தது. குக்கிராமம் என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள ஆரமித்திருக்கிறது மணவாடி.

தொட்டியச்சி அம்மன் –

முக்கிய சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பக்கம் நடந்து சென்றால்தான் மணவாடி கிராமம் வரும். அப்படி கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது பக்கத்தில் ஒரு ஒத்தயடி பாதை பிரிகிறது. அந்த பாதையில் நடந்து சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் வேப்பம்மரத்தின் அடியில் மண்ணில் சொறுகப்பட்டிருக்கும் வேல்கம்புகளும், செங்குத்தான  நான்கு பெரிய கற்களும் தெரிகின்றன. அந்த கற்கள் திருவிழா காலங்களி்ல் குடில் அமைக்க வைக்கப்பட்டவை. அந்த நான்கு கற்களுக்கும் மத்தியில் முக்கோண வடிவம் என்று கணிக்கும்படியான கற்கள் வரிசையாக இருக்கின்றன. அவை கன்னிமார்கள். வலது புறம் இருப்பது பெரியசாமி, இடது புறம் இருப்பது கருப்புசாமி, அதோ அதுதான் தொட்டியச்சி என்றார் உடன் வந்த உறவினர். சரியான களமின்மை, இதுதான் நாட்டார் தெய்வங்களின் பலமும், பலவீனமும்.

கதை –

சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருக்க, கரூர் மாநாகராக மாறியிறாத காலம். வேட்டைக்கு பழக்கம் செய்யப்பட்ட உயர் ரக நாய்களுடன் தொட்டியம் நாயக்கர்களில் ஒரு குழு வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த குழுவில் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் வீரத்துடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருமுயல்களை பிடிப்பதற்கு நிலத்தில் வலையமைத்தல், பெருமிருங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்செய்தல் என பல வழிமுறைகளை கையாண்டனர். இரவு பகலாய் விலங்குகளை வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்கள் குழுவில் இருந்த பெண்ணொருத்தி வழிதவறியது தெரியவில்லை. நெடுநேரத்திற்குபின் அந்த பெண் தவறியதை அறிந்து தேடத்தொடங்கினர்.

இரவு முழுவதும் தேடியும் அவர்களுக்கு பலன்கிடைக்கவில்லை. இது அந்த குழுவில் இருந்த மற்ற பெண்களுக்கு மிகவும் வேதனை தருவதாக இருந்தது. மறுநாள் காலையில் வழிதவறியப் அந்தப் பெண் மணவாடி கிராமத்திற்கு வந்தாள். வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த சோழிய வெள்ளாள மக்கள் வேட்டை தோரனையுடன் குதிரையில் வீரத்தின் உருவாகவே வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு அசந்து போனார்கள். அவள் வழிதவறி அலைவதையும், அவளுடன் வந்த கூட்டம் அவளை தேடுவதையும் அறிந்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் துயர் தீர்க்க ஆட்கள் சிலரை தொட்டியம் நாயக்கர்களை தேடி அனுப்பினார்கள். அந்த ஆட்களும் விரைந்து தேடுதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு வழியாக தொட்டியம் நாயக்கர் குழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, வழிதவறிய அந்த வேட்டைக்காரப் பெண்ணோடு சேர்த்துவைக்கப்பட்டது. பெருநிம்மதியுடன் தங்கள் வேலையை பார்க்க திரும்பிய சோழிய வெள்ளாளர்களுக்கு தொட்டியம் நாயக்கர்களின் கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அது இரவு முழுதும் வேறு இடத்தில் தங்கியப் பெண்ணை மீண்டும் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப்பெண் தவறு செய்யவில்லை என்று அறிந்தும் கூட மனதினை கல்லாக்கிக் கொண்டு சமூகத்தின் கட்டுப்பாட்டினை காப்பாற்ற, அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தன் இனமக்களின் பிரிவினை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த செய்தி சோழிய வெள்ளாளர்களுக்கு தெரியவருகையில் மிகவும் வருத்தம் கொள்கின்றார்கள். பிள்ளைமாரான சோழிய வெள்ளாளர்கள் கன்னி தெய்வங்களை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.பொதுவாக தன் வீட்டு கன்னி தெய்வங்களை தங்கள் வீட்டிலேயே வைத்து வணங்குதல்தான் வழக்கம்.தங்கள் இனமில்லை என்ற போதும் தங்கள் மண்ணில் உயிர்நீத்த பெண்ணை வணங்குவதென ஒருமித்து தீர்மானித்து இன்று வரை வணங்கி வருகிறார்கள். தொட்டியச்சி என்ற தொட்டியம் நாயக்கர் சமூகத்தின் பெயரையே தெய்வத்தின் பெயராக சொல்கிறார்கள். இறந்தபோன அந்தப் பெண்ணின் உண்மைப் பெயர் தெரியவில்லை. மேலும் தொட்டியம் நாயக்கர் சமூகத்திலிருந்து ஒரு தம்பதியை அழைத்துவந்து, அவர்கள் தலைமையில் தான் தொட்டியச்சியின் திருவிழாவினை சோழிய வெள்ளாளர்கள் நடத்துகிறார்கள்.

மிகவும் சுருக்கமாக சொல்வதானல் சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்டு இறந்த போன ஒரு பெண் தெய்வமான கதைதான் தொட்டியச்சியின் கதை.

வெள்ளாளருக்கு உரிய குல பட்டங்களின் பட்டியல்

வெள்ளாளர் குல பட்டம்

வெள்ளாளர் குல பட்டம்

பிள்ளை –
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub castes using Pillai title)

ஊற்று வளநாட்டு வெள்ளாளர் – Oottru Valanattu Vellalar
அகமுடைய பிள்ளை with ancestry in undivided Thanjavur District- Agamudaya Pillai with ancestry in undivided Thanjavur District
ஆறுநாட்டு வெள்ளாளர் – Aarunattu Vellalar
சேரகுல வெள்ளாளர் – Cherakula Vellalar
பாண்டிய வெள்ளாளர் – Pandiya Vellalar
சோழிய வெள்ளாளர் – Chozhia Vellalar
கார்கார்த்தார் – Karkarthar
திருநெல்வேலி சைவ வேளாளர் – Tirunelveli Saiva Velallar
நாஞ்சில் வெள்ளாளர் – Nanjil Vellalar
வீரக்கொடி வெள்ளாளர் – Veerakodi Vellalar
மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள் – Moondrumandai Enbathunalu Oor Sozhia Vellalar
ஓ.பி.எஸ் வெள்ளாளர் – O.P.S. Vellalar
இல்லத்து பிள்ளைமார் – Illathu Pillaimar

முதலியார் –
வேளாளர் சாதியமைப்பில் முதலியார் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub castes using Mudaliar title)

தொண்டைமண்டல சைவ வெள்ளாளர் – Thondaimandala Saiva Velalar
துளுவ வெள்ளாளர் – Thuluva Vellalar or Arcot Mudaliar
பூந்தமல்லி முதலியார் / பொன்நேரி முதலியார்Poonthamalli Mudaliar/Ponneri Mudaliar

கவுண்டர் –
வேளாளர் சாதியமைப்பில் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub-castes using Gounder title)

கொங்கு வெள்ளாளர் – Kongu Vellalar

யார் இந்த சோழிய வெள்ளாளர் – பாகம் இரண்டு

தொடரின் முந்தையப் பகுதிகள் –

யார் இந்த சோழிய வெள்ளாளர் – பாகம் ஒன்று

யார் இந்த சோழிய வெள்ளாளர்? –

இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்டோர் சாதிப்பட்டியலில் 110வது சாதியாய் அங்கிகாரம் செய்யப்பட்டுள்ள சாதியானது சோழிய வெள்ளாளர் சாதியாகும். சோழிய வெள்ளாளர் என்று பொதுவாக அறியப்பட்டாலும் சோழிய வேளாளர், சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் என்று அழைக்கப்படும் அனைவருமே சோழிய வெள்ளாளர் ஆவார்கள். யாரெல்லாம் சோழிய வெள்ளாளர்கள் என்று சொல்லப்படுகிறார்கள் என்று அறியும் முன்பு,.. சோழர்கள் பற்றியும், வெள்ளாளர்கள் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.

சோழர்கள் – சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர்களில் சோழர்களும் ஒருவர். புலியை கொடியின் சின்னமாக கொண்டும், ஆத்தி மலரை சூடியும் பெருமைமிகுந்த மன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள். காலத்தின் அடிப்படையில் சோழர்களை முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் என வகைபடுத்தி இருக்கிறார்கள். கலை, அரசியல், சமூகம் என எல்லா துறைகளிலும் சிறந்துவிளங்கியிருக்கிறார்கள்.

சோழர்கள் என்ற பெயருக்கான காரணத்திற்கு தேவநேயப் பாவாணரும், பரிமேலழகரும் வேறு வேறு கருத்தினை தெரிவிக்கின்றார்கள். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து “சோழ” என்று வழங்கிற்று என்கிறார் தேவநேயப் பாவாணர். குலப்பட்டமாக சோழர் என்பது வழங்கி வந்ததாக பரிமேலழகர் கூறுகிறார். இரண்டில் எது சரி என்பதை வரலாறை ஆராய்ந்தவர்கள் தான் கூறவேண்டும்.

வெள்ளாளர் –

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களுள், மருத நிலத்தில் செம்மைபடுத்தப்பட்ட விவசாயம் தொடங்கியது. அங்கு வெள்ளத்தை தடுத்து ,தங்கள் தொழில் நுட்ப அறிவோடு கால்வாய் மூலம் நீரை ஏரிக்கு திருப்பிஅங்கு சேமிப்பு முடிந்த உடன் உபரி நீரை அடுத்த ஏரிக்கு கடத்திசங்கிலி தொடர் போல நீர் மேலாண்மையை உருவாக்கிதங்கள் விவசாயத்தின் உயர்வுக்கு பயன் படுத்திய மிகச் சாதாரண மக்கள் வெள்ளாளர் எனப்பட்டனர். 

சரி, இதனைக் கொண்டு சோழ நாட்டில் வாழ்ந்த வெள்ளாளர்களை “சோழிய வெள்ளாளர்கள்” என்று   அர்த்தம் கொள்ளாமா?. ஏறத்தாள இதுவே சரியான கருத்து என்று சொல்வேன். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், தொண்டைமண்டல வெள்ளாளர், பாண்டி வெள்ளாளர் என்பவைகளின் பின்னனியும் இதைப் போன்ற குறிப்பிட்ட நாட்டின் வெள்ளாளர்களையே குறிக்கிறது. சோழிய வெள்ளாளர் என்பதில் உள்ள இரு சொல்லுக்கும் பொதுவான பொருள் பார்த்தோம். சிலர் சோழிய வேளாளர் என்றும் சொல்கின்றார்களே,. வெள்ளாளர், வேளாளர் இரண்டும் ஒன்றா என்ற சிந்தனை எழுகிறது.

வேளாளர் –

வெள்ளாளர் எனும் சொல்லுக்கும் வேளாளர் எனும் சொல்லுக்குமான வேறுபாடு ஆண்டானுக்கும், அடிமைக்கும் உள்ள வேறுபாடாக உள்ளது. வெள்ளாளர் சொல் விவசாயிகளை குறிக்கும் போது, வேளாளர் என்பது அதிகாரத்திற்குறிய சொல்லாக உள்ளது. வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு. பூங்குன்றன் (தொல்குடிகள்). இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும்.யாழ்ப்பாண பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது. இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.

வேளாளர் என்பதை வெள்ளாளருக்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது விக்கிப்பீடியா போன்ற சமூக தளங்களில் உள்ள எழுத்துகளைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்தோம். சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன் சோழிய வெள்ளாளர்களே இல்லையா என்றால் இருந்தார்கள். அதைப் பற்றி வரும் கட்டுரையில் காண்போம்.

யார் இந்த சோழிய வெள்ளாளர்? – பாகம் ஒன்று

யார் இந்த சோழிய வெள்ளாளர்?

எதற்காக “சோழிய” என்ற சொல் வருகிறது?

சோழியர் என்பது சோழர்களை குறிக்கின்றதா?

சோழர்களுக்கும் சோழிய வெள்ளாளர்களுக்கும் என்ன சம்மந்தம்?

சோழர்களின் ஆட்சிக்கு முன் சோழிய வெள்ளாளர்கள் இருந்தார்களா?

இருந்தார்கள் என்றால் அவர்களின் அப்போதைய பெயர் என்ன?

“சோழிய வெள்ளாளர்” என்று உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும். இது போன்ற எண்ணற்ற கேள்விகள் அடுக்கடுக்காக மனதிற்குள் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் விடை எங்கே கிடைக்கும் என்று தேடி, கிடைக்கும் தகவல்கள் திரட்டுவதே இந்த பதிவின் நோக்கம். இதற்காக உதவப்போகும்  இணையதளங்களுக்கும், புத்தகங்களுக்கும், நண்பர்களுக்கும் இப்போதே என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சாதியைப் பற்றி தனி மனிதன் தேடி அறிவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என உங்களுக்கு கேள்வி எழலாம். எப்போதுமே தனிமனிதனின் தேடல் அவனோடு முடிந்து விடுவதில்லை,. இது காலத்தின் உந்துதலால் ஏற்பட்ட ஒரு தேடல். நமக்கு ராகுல் காந்தியின் தாத்தாவின் பெயர் பெரோஸ் காந்தி என தெரிந்திருக்கிறது. நம்முடைய தாத்தாவின் பெயரும் நம்மில் சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தியின் தாத்தாவின் பெயர் மோதிலால் நேரு என்று நாம் அறிந்திருக்கிறோம். ஒரே ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள். உங்கள் பாட்டியின் அப்பா பெயரோ, தாத்தா பெயரோ உங்களுக்கு தெரியுமா என.

நம்மைப் பற்றியும், நம் குடும்பத்தினைப் பற்றியும், நம் பரம்பரை பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பலருக்கும் புரிவதில்லை. எனக்கு இதில் கொஞ்சம் ஆர்வம் வரும் போது பரம்பரை பற்றிய அதிக தகவல்கள் தெரிந்தவர்கள் எல்லோரும் இறைவனிடத்தில் போய்வி்ட்டார்கள். அதோடு நின்றுவிடாமல் அவர்களின் பூர்வீகங்களையும், அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அறிய முற்படுகின்ற போது எனக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டு இந்த “சோழிய வெள்ளாளர்” என்ற சாதி.

இதைக் கொண்டு என்னவெல்லாம் அறிய முடியும் என பார்க்கப் போகிறேன். கிடைக்கும் தகவல்களை இங்கே பகிரப் போகிறேன். நன்றி.